Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆளுநரை திரும்ப பெற வேண்டும்; மோடி செய்த டுவீட்; கையில் எடுத்த காங்கிரஸ்

Modi
Last Updated: வியாழன், 17 மே 2018 (19:34 IST)
2011ஆம் ஆண்டு மோடி ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று டுவீட் செய்ததை வைத்து தற்போது காங்கிரஸ் கர்நாடகா ஆளுநர் வாஜூபாய் வாலாவை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

 
எடியூரப்பாவை கர்நாடகா முதல்வராக பதவியேற்க அளுநர் அழைப்பு விடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியமைக்க போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாத பாஜகவை எப்படி ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்றும் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுவிட்டது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இதனால் காங்கிரஸ், தங்களை விட குறைவாக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த மாநிலங்களில் காங்கிரஸ் தற்போது போர் கொடி தூக்கியுள்ளது. 
 
இந்நிலையில் மோடி 2011ஆம் ஆண்டு செய்த டுவீட்டை வைத்து காங்கிரஸ் கர்நாடக மாநில ஆளூநரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
 
2011ஆம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவருக்கும் ஆளுநர் பரத்வாஜ்க்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது. அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஆளுநரை ஜனாதிபதி திரும்ப வேண்டும் என்று பதிவிட்டார்.
 
இதைவைத்து தற்போது காங்கிரஸ் கர்நாடக மாநில ஆளுநர் வாஜூபாய் வாலாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :