ஐபோனுக்கு பதிலாக சோப்பு: பிளிப்கார்ட் மீது வழக்குப்பதிவு

Last Modified வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (00:56 IST)
மும்பையை சேர்ந்த ஒருவர் உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக இணையதளமான பிளிப்கார்ட்டில் ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்து அதற்காக அவர் ரூ.55 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு இன்று பிளிப்கார்ட்டில் இருந்து ஒரு பார்சல் வந்தது. கையெழுத்து போட்டு பார்சலை பிரித்த அந்த நபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பார்சலில் ஐபோனுக்கு பதிலாக வெறும் ரூ.10 மதிப்பு கொண்ட டிடர்ஜெண்ட் சோப்பு மட்டுமே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் மும்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பிளிப்கார்ட் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த பிளிப்கார்ட் நிறுவனம், இந்த தவறு எப்படி நடந்தது என்பது விசாரணை செய்யப்படும் என்றும், பாதிக்கப்பட்ட நபருக்கு கண்டிப்பாக உரிய பொருள் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :