வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2018 (14:41 IST)

வாட்ஸ்அப் அப்டேட்: யூடியூப் இன்டகிரேஷன்; ஐபோன் பயனர்கள் கவனத்திற்கு...

வாட்ஸ்அப்-பில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் யூடியூப் இன்டகிரேஷன் வசதி வாட்ஸ்அப் 2.18.11 பதிப்பில் வழங்கப்படுகிறது.
 
வாட்ஸ்அப் செயலியில் யூடியூப் இன்டகிரேஷன் வழங்கும் பணிகளை அந்நிறுவனம் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது இதனை ஐபோன்களில் சாத்தியமாக்கியுள்ளது. இந்த வசதியை வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
 
வாட்ஸ்அப் திரையில் யூடியூப் இன்டகிரேஷன் வசதி முதற்கட்டமாக ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் அப்டேட்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் யூடியூப் வீடியோக்களை யூடியூப் செயலி அல்லது பிரவுசர்களில் சென்று பார்க்கும் வசதி வழங்கப்பட்டது. தற்போது ஐபோன் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் சாட் திரையில் இருந்தபடியே யூடியூப் வீடியோக்களை பார்க்க முடியும். 
 
மேலும், இதில் Play, Pause, Close மற்றும் Full Screen உள்ளிட்ட அம்சங்களுக்கு ஏற்ற பட்டன்களும் உள்ளது. வாட்ஸ்அப் வாடிக்கையாளருக்கு யூடியூப் வீடியோ வரும் போது யூடியூப் பட்டன் திரையில் தோன்றுகிறது. இதனால் இது மேலும் பணியை எளிமையாக்குகிறது.