வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (22:34 IST)

எலியினால் நடந்த கொலை: டெல்லியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

எலியினால் பல நோய்கள் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சம்பவங்கள் நாம் அறிந்ததே. ஆனால் ஒரு எலியினால் கொலை ஒன்று நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

டெல்லியில் ஒரு நபர் தன்னுடைய வீட்டில் செத்த எலி ஒன்றை தூக்கி அருகில் உள்ள வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் அருகில் இருந்த இரும்புக்கம்பியை எடுத்து எலியை போட்டவரை தாக்க படுகாயம் அடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் கொலையாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். ஒரு செத்த எலியால் ஒரு உயிர் பலியானது மட்டுமின்றி இன்னொருவரின் வாழ்க்கை சிறையில் கழிக்க வேண்டிய நிலையில் உள்ளது.