வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாட்டின் சிறப்புகள்...!

புரட்டாசி மாதத்தில் கடவுளர்கள் மற்றும் முன்னோர்களை வழிபட புண்ணியங்கள் கிடைக்கப் பெறுவதால், இம்மாதம் புனித புரட்டாசி என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. தமிழ் ஆண்டின் ஆறாவது மாதமாகவும், தட்சியாண காலத்தின் மூன்றாவது மாதமாகவும் புரட்டாசி வருகிறது.
புரட்டாசியும், மார்கழியும் எமனின் கோரை பற்கள் என்று இந்து மதத்தில் கருதப்படுகிறது. எனவே இம்மாதத்தில் தெய்வங்களின் வழிபாடுகள் சிறப்பாகச்  செய்யப்படுகின்றன.
 
திருப்பதியில் புரட்டாசியில் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பு வாய்ந்தது. புரட்டாசியில் நவராத்திரி, விஜயதசமி, புரட்டாசி சனி, மகாளய அமாவாசை, கேதார கௌரி விரதம், நடராஜர் வழிபாடு, புரட்டாசி பௌர்ணமி, நிறைமணி விழா, பத்மநாபா ஏகாதசி, அஜா ஏகாதசி போன்ற வழிபாட்டு முறைகளும், விழாக்களும்  கொண்டாடப்படுகின்றன.
 
ஏதேனும் ஒரு புரட்டாசி சனிக்கிழமையில் மாவினால் விளக்கு செய்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எள்சாதம், உளுந்த வடை ஆகியவற்றை இவ்வழிபாட்டில் படையலிடுகின்றனர்.
 
சிலர் திருமண் கொண்டு நாமமிட்டு கோவிந்தா கோவிந்தா எனக் கூறிக்கொண்டு பணத்தையும், அரிசியையும் பிச்சைப் பொருளாக ஏற்கின்றனர். பணத்தினை  திருப்பதியில் செலுத்துகின்றனர். அரிசியைக் கொண்டு பொங்கலிட்டு எல்லோரும் தானம் அளிக்கின்றனர்.
 
பெரும்பாலான பெருமாள் கோவில்களில் வழிபாடு மேற்கொள்ளப்பட்டு அன்னதானம் நடத்தப்படுகிறது. புரட்டாசியில் செய்யும் அன்னதானம் மோட்சத்தைக் கொடுக்கும் என கூறப்படுகிறது.
 
புரட்டாசி சனிக்கிழமையில் சனி பகவான் தோன்றினார். ஆதலால் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு விரதமிருந்து வழிபாடுகள் நடத்துகின்றனர்.