Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கர்நாடகா எம்.எல்.ஏ.க்களை கேரளாவில் தங்க வைக்க முடிவு!

Congress
Last Updated: வியாழன், 17 மே 2018 (18:31 IST)
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கேரளா ரிசார்ட்டில் தங்க வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

 
நேற்று இரவு கர்நாடகா முதல்வராக பதிவியேற்க ஆளுநர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் நேற்று காலை முதலே குதிரை பேரம் தொடங்கியது. 104 இடங்களை பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் இழுக்க பேரம் பேசி வருவதாக சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆகியோர் குற்றம்சாட்டினார்.
 
அதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்து மூலம் ரிசார்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கர்நாடகாவில் கூவத்தூர் பார்முலா அரங்கேறியது. இதற்கு முழு காரணம் மோடிதான் என்று சித்தராமையா கூறினார். இந்நிலையில் தற்போது எம்.எல்.ஏ.க்களை கேரளாவில் தங்க வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
 
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கிருந்த விடுத்திக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பி பெறப்பட்ட நிலையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
தேர்தல் முடிவுகள் வெளியான மாலை அன்றே கேரளா சுற்றுலா துறையின் டுவிட்டர் பக்கத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு தங்கள் ரிசார்ட்டில் வந்து தங்க அழைத்து விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :