இறுதிச்சடங்கு செய்யப்பட்ட கணவர் நேரில் வந்தார் - மனைவி இன்ப அதிர்ச்சி


Murugan| Last Updated: திங்கள், 11 செப்டம்பர் 2017 (18:33 IST)
இறந்து விட்டதாக கருதி இறுதி சடங்கு செய்யப்பட்ட ஒரு ஆண், உயிரோடு மீண்டும் திரும்பி வந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

 

 
கேரள மாநிலம் கொல்லங்கோடு வடகதரையை சேர்ந்த தம்பதி கிருஷ்ணன் குட்டி (58), ராஜேஸ்வரி (54). கணவன்,மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக 10 மாதங்களுக்கு முன்பு மனைவியிடம் கோபித்துக்கொண்டு கிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. போலீசாரும் தேடிவந்தனர்.
 
இதற்கிடையில் சமீபத்தில் விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் உங்கள் கணவன் போலவே இருக்கிறார். நேரில் வந்து காணாமல் போன உங்கள் கணவர் இவர்தானா? என அடையாளம் காட்டுங்கள் என போலீசார் அழைத்துள்ளனர். 
 
நரைத்த முடியும், தாடியுடனும் இருந்த அவரை பார்த்த ராஜேஸ்வரி, அது தன் கணவன் இல்லை எனக் கூறிவிட்டார். அந்நிலையில், அந்த நபர் மரணமடைந்தார். அதன் பின் மீண்டும் போலீசார் அழைத்து, சரியாக அடையாளம் காட்டுங்கள் எனக் கூற, அங்கு சென்ற ராஜேஸ்வரி, தன் கணவர் பற்றிய சில அங்க அடையாளங்களை கூறியுள்ளார். அது அனைத்தும் அந்த நபரிடம் ஒத்துபோக, அவர்தான் தன் கணவர் என்ற முடிவுக்கு வந்துள்ளார் ராஜேஸ்வரி. 
 
அதிர்ச்சியில் அழுது புலம்பிய அவரை தேற்றிய உறவினர்கள், இறுதிச்சடங்கு முதல் மற்ற காரியங்களை செய்தனர். 
 
இந்நிலையில், மன ஆறுதலுக்காக ராஜேஸ்வரியை கோவில் கோவிலாக அவரது உறவினர்கள் கூட்டி சென்றுள்ளர். அப்போது பழனி முருகன் கோவிலில் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி, ஒருவரை பார்த்து ‘என் கணவர்’ எனக் கூச்சலிட்டு ஓடி சென்று அவரை கட்டிப்பிடித்துக்கொண்டார்.
 
அப்போதுதான், கிருஷ்ணன் இன்னும் மரணமடையவில்லை என்பதும் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட நபர் வேறு யாரோ ஒருவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த உறவினர்கள் வாழ்த்த, தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார் கிருஷ்ணன் குட்டி..

அபப்டியெனில், இறுதிச் சடங்கு செய்யப்பட்ட நபர் யார் என்ற விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனராம்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :