1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2017 (15:10 IST)

மின்சார கட்டணத்திற்கும் ஜிஎஸ்டி?? மத்திய அரசு ஆலோசனை!!

மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. இந்த வரி விதிப்பால் வர்த்தகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகினர். ஜிஎஸ்டி திட்டத்திற்கு பல எதிர்ப்புகளும் எழுந்தன.
 
இதனையடுத்து, ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்தவும் வரி விதிப்பு கட்டமைப்பை மாற்றியாமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. அதன் பின்னர் ஜிஎஸ்டி சதவீதத்தில் மாற்றங்களையும் கொண்டுவந்தது. 
 
தற்போது மின்சார கட்டணங்களுக்கு 25 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுகள் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டிவருகின்றன. தற்போது, மின் கட்டணத்தையும் ஜிஎஸ்டி நடைமுறைக்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.  
 
ஜிஎஸ்டியில் மின்சாரக் கட்டணத்தை இணைத்தால் மாநில அரசின் வருவாய் குறைய வாய்ப்புள்ளது. எனவே இதற்கு மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம், மின் மின் கட்டணமும் குறைய வாய்ப்புள்ளது.