வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2017 (12:30 IST)

பாவம் செய்தால் கேன்சர் வரும்; சுகாதாரத்துறை அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு

பாவம் செய்தால் புற்றுநோய் வரும் என அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமண்ட பிஸ்வா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



 
பாஜகவை சேர்ந்த அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமண்ட பிஸ்வா கவுகாத்தியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு ஆசிரியர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
கடவுள் நாம் செய்த பாவங்களுக்காக நம்மை தண்டிப்பார். நாம் இளைஞர்களுக்கும் புற்றுநோய் வருவதை பார்த்திருக்கிறோம். அவர்கள் விபத்துகளில் சிக்குவதையும் பார்த்திருக்கிறோம். நீங்கள் அவர்களின் கடந்த காலத்தை பார்த்தால் அவர்கள் செய்த பாவத்திற்கான தண்டனையாக அது அமைந்திருக்கும். நாம் செய்த பாவங்களுக்கான தண்டனையை நாம் பெற்றே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் இதுபோன்ற கருத்தை தெரிவிப்பது பெரும் வேடிக்கையாக அமைந்துள்ளது.