வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (15:48 IST)

தமிழ் கற்கும் மத்திய தலைகள்: காரணம் என்ன??

பாஜக-வின் முக்கிய மூத்த தலைவரும் மோடியின் வலதுகைப்போல செயல்படும் அமித்ஷா தமிழ் பயின்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

 
அமித்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அப்போது கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து உரையாடுகிறார். 
 
அப்போது சில சமயங்கலில் அவருக்கு மொழி பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், அந்தந்த மாநில மொழிகளில் பேச திட்டமிட்டுள்ளார். 
 
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடக ஆகிய சில முக்கிய மாநிலங்களில் பாஜக-வை நிலைநிறுத்த பெருதும் உழைத்து வருகிறார் அமித்ஷா.
 
எனவே, பெங்காலி மற்றும் தமிழை வேகமாக கற்று வருகிறார். அதோடு கர்நாடாக பாரம்பரிய இசையும் கற்றுவருகிறார். பாஜக கட்சி கொள்ளைகளை நிலைநாட்டுவதற்கு மொழியை கற்று வருகிறார்  என கூறப்படுகிறது. 
 
பாஜக நிலையாக இல்லாத மாநிலங்களில் அவர்களின் தாய் மொழியிலேயே பிரச்சாரம் செய்தால், பாஜக மிக எளிதில் இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக, அமித்ஷா நம்புகிறார். 
 
தமிழ், பெங்காலி, கர்நாடகம் மட்டுமின்றி மனிப்பூரி, அசாமி மொழிகளையும் அவர் கற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கு முன்னர் தமிழக ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு வருகிறார் என செய்தி வெளியான சில நாட்களிலேயே கோவையில் அதிரடி ஆலோசனையில் ஏடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.