வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (19:13 IST)

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்; அரசு வேலை கிடையாது!!

2 குழந்தைக்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடையாது என அசாம் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
கடந்த 2001-ல் 2 கோடியே 66 லட்சமாக இருந்த அசாமின் மக்கள் தொகை 10 ஆண்டுகளில் 3 கோடியே 12 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது அசாம் அரசு.
 
அசாம் மாநில அரசு புதிய மக்கள் தொகை கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களு அரச்ய் வேலை கிடையாது என்றும் உள்ளாட்சி பிரதிநிதி பதவியோ கிடைக்காது என தெரிவித்துள்ளது.
 
அரசு நிர்ணயித்த வயதுக்கு முன்னதாக திருமணம் செய்பவர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற கட்டுப்பாடும் கொண்டு வரப்பட்டுள்ளது.