வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 12 ஜூலை 2017 (16:48 IST)

குடும்பக்கட்டுப்பாடு செய்தால் 4ஜி போன் இலவசம்: மருத்துவமனையில் குவியும் கூட்டம்!

குடும்பக்கட்டுப்பாடு செய்தால் 4ஜி போன் இலவசம்: மருத்துவமனையில் குவியும் கூட்டம்!

அதிகரித்து வரும் மக்கள் தொகையை குறைக்க ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்பவர்களுக்கு 4ஜி போன் மற்றும் சேலைகள் பரிசாக வழங்கப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆனால் இந்தியா வேகமாக மக்கள் தொகையில் அதிகரித்து வருவதால் வரும் காலங்களில் சீனவை பின்னுக்கு தள்ளி இந்தியா மக்கள் தொகையில் முதல் இடம் பிடிக்கும் என ஐநா அறிவித்துள்ளது.
 
இதனையடுத்து மக்கள் தொகையை குறைக்க ராஜஸ்தான் அரசு புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. குடும்பக்கட்டுப்பாடு செய்பவர்களுக்கு 4ஜி போன் மற்றும் புடவை வழங்கப்படும் என்பதே அந்த திட்டம். இந்த திட்டத்தின் படி ஜெய்பூரில் உள்ள ஜலாவரில் குடும்பக்கட்டுப்பாடு செய்தவர்களுக்கு 4ஜி போன் மற்றும் புடவைகள் பரிசாக வழங்கப்பட்டது.
 
இதனையடுத்து இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
 
குடும்பக்கட்டுப்பாடு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து மக்கள் தொகையை குறைப்பதற்கே இந்த புதிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத்திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் இதுவரை 8410 பேர் குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.