Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அந்த முட்டாளை தூக்கில் போடுங்கள் - கொந்தளித்த நடிகை சனா கான்

Last Modified புதன், 31 ஜனவரி 2018 (14:25 IST)
எட்டு மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை தூக்கில் போட வேண்டும் என நடிகை சானா கான் கொந்தளித்துள்ளார்.

 
டெல்லியில் எட்டு மாத பெண் குழந்தையை, உறவினர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் சமீபத்தில் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை சானாகான் “இது மோசமான நிகழ்வு. அந்த வாலிபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த தேசத்தின் பாதுகாப்பு மீதுள்ள என் அனைத்து நம்பிக்கைகளையும் நான் இழந்துவிட்டேன். இந்த முட்டாள் விரைவில் ஜாமீனில் வெளிவருவான். அவனை ஏன் தூக்கில் போடக்கூடாது? சட்டத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக நாம் கூறுகிறோம்? ஆனால், அது உண்மையாக இருக்கிறதா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :