Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

8 மாத குழந்தை பலாத்காரம்: உயிருக்கு போராடும் கொடுமை!

Last Modified செவ்வாய், 30 ஜனவரி 2018 (14:50 IST)
நமது நாட்டில் தினமும் ஏதாவது பலாத்கார சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது. அதிலும் நாட்டின் தலைநகர் டெல்லியில் நிலைமை இன்னும் மோசம். பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன.
 
இந்நிலையில் டெல்லியின் சாகுர்பஸ்தி பகுதியில் உச்சக்கட்ட வக்கிரம் ஒன்று அரங்கேறியுள்ளது. பிறந்து 8 மாதங்களே ஆன பெண் குழந்தையை 28 வயதான காமக்கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
 
8 மாத குழந்தையை அதன் பெற்றோர்கள் 28 வயதான ஒருவரின் மேற்பார்வையில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். அவர்கள் வேலைக்கு சென்ற பின்னர் அந்த நபர் குழந்தையை தனி அறைக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இந்நிலையில் குழந்தையின் பிறப்புறுப்பில் இரத்தம் வருவதை பார்த்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
 
வாயை துணியை வைத்து அடைத்து பலாத்காரம் செய்ததால், அந்த குழந்தை மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறது. சில அறுவை சிகிச்சைகள் குழந்தைக்கு செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்த குழந்தை ஆபத்தான கட்டத்திலேயே உள்ளது. குழந்தையின் இந்த நிலைமைக்கு காரணமான கொடூரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :