செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 8 ஆகஸ்ட் 2020 (16:03 IST)

நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து...வீடு திரும்பினார் !

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதையடுத்து சிகிச்சையில் குணமாகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் முதலில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதன் பின்னர்

அமிதாப்பச்சன் அவர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இன்னமும் அபிஷேக் பச்சன் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அபிஷேக் பச்சம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கொரோனா பாதிபை நான் வெல்வேன் என்று கூறினேன். அதேபோல் இன்று மதியம் எனக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எனக்கு நெகட்டிவ் வந்தது.

எனக்காகப் பிரார்த்தனை செய்த உங்களுக்கு நன்றி! நானாவது மருத்துவமனை மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி என்று கூறியுள்ளார்.