1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (18:51 IST)

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் அமிதாப்!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
மேலும் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்டார்ஜ் செய்யப்பட்டனர். இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி அமிதாப்பச்சன் அவர்களும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் 
 
இதுகுறித்து அமிதாப் தனது டுவிட்டரில் உறுதி செய்ததோடு தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அபிஷேக் பச்சன் இன்னும் கொரோனாவில் இருந்து குணமாகவில்லை என்றும் அவர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது