செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (11:29 IST)

என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன் –ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராய் உருக்கமான பதிவு!

நடிகை ஐஸ்வர்யா ராய் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் ரசிகர்களை நினைத்து உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து தங்கள் குடும்பத்துக்காக பிராத்தனை செய்த லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஐஸ்வர்யா ராய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எங்கள் குடும்பத்தின் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களுக்கு என்றென்றும் கடன் பட்டிருக்கிறோம். உங்கள் அனைவரின் நலனுக்காக பிரார்த்திக்கிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.’ எனத் தெரிவித்துள்ளார்.

இன்னமும் அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோர் சிகிச்சையில் இருந்து திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.