Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

40 வருடங்களாக தேடப்பட்ட நபர் சமூக வலைதளத்தால் கண்டுபிடிப்பு

mani
Last Modified திங்கள், 16 ஏப்ரல் 2018 (15:57 IST)
மணிப்பூரில் 40 வருடங்களாக தேடப்பட்டு வந்த நபர், சமூக வலைதளத்தால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
1978-ம் ஆண்டு  மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கோம்ட்ராம் கம்பீர்,  தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார். அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், தேடுதலை கைவிட்டனர். 
 
இந்நிலையில் சமீபத்தில் கோம்ட்ராம் கம்பீர் சமூக வளைதளத்தில் இருந்ததை அறிந்த அவரது குடும்பத்தினர் மும்பை போலீஸாரின் உதவியோடு, கம்பீரை கண்டுபிடித்தனர். இச்சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :