Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தங்கம் வென்ற மீராபாய், சஞ்சிதாவுக்கு மணிப்பூர் அரசு ரூ.15 லட்சம் பரிசு

p
Last Modified வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (16:48 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கும், சஞ்சிதா சானுவுக்கும் மணிப்பூர் முதல்வர் ரூ.15 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார்.
 
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் முதல் நாளான நேற்று பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கத்தை வென்றார். இதனையடுத்து, இன்று மீண்டும் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சஞ்சிதா சானு தங்கம் வென்றார்.
p
 
இதனால் இந்தியா இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்துடன், தற்போது பதக்கப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 
இந்த நிலையில், தங்கப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கும், சஞ்சிதா சானுவும் மணிப்பூர் மாநிலத்தை சேர்தவர்கள் என்பதால் அம்மாநில முதல்வர் ரூ.15 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :