1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (16:43 IST)

ஏறியா தாண்டி தண்ணி பிடித்ததால் சிறுமியை தீயிட்டு கொளுத்திய நபர்கள்

தண்ணீர் பிரச்சனைக்காக சிறுமியை தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பைனா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவரது மகள் நிதி(16). சிறுமி அருகில் உள்ள தெருவில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அங்கிருந்த ஒரு கும்பல் சிறுமியிடம், இது எங்க ஏறியா, இங்கெல்லாம் தண்ணி பிடிக்க கூடாது என மிரட்டியுள்ளனர். ஆனால் சிறுமி அசராமல் தண்ணீர் பிடித்துக் கொண்டே இருந்தார்.
 
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், சிறுமி மீது பெட்ரோல் ஊத்தி தீ வைத்து கொளுத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.