1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By siva
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (11:54 IST)

கைகூப்பித் தொழுகிறேன்: தேவர்ஜெயந்தி குறித்து வைரமுத்து!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58 ஆவது குருபூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் சமூக வலைதளங்கள் மூலம் பசும்பொன் தேவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கவியரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் ’கசிந்த கண்ணோடும் கனத்த நெஞ்சோடும் கை கூப்பித் தொழுகிறேன்’ என்று தேவர் ஜெயந்தி குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
குற்றப்பரம்பரை என்று
குறிவைக்கப்பட்ட கூட்டத்தைக்
கொற்றப்பரம்பரை என்று
முற்றும் விடுதலை பெற்றுத்தந்த
வெற்றித் தலைவர் தேவர் திருமகனார்.
அவர் பிறந்த மண்ணைக்
கசிந்த கண்ணோடும்
கனத்த நெஞ்சோடும்
கைகூப்பித் தொழுகிறேன்.
#தேவர்ஜெயந்தி