1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (18:11 IST)

வளர்பிறையில் கறை எதற்கு? விஜய்சேதுபதிக்கு வைரமுத்து வேண்டுகோள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ள 800 திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பாரதிராஜா, சீனு ராமசாமி, கவிஞர் தாமரை, சீமான் உள்பட பலர் விஜய் சேதுபதியிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என அறிவுரையையும் எச்சரிக்கையும் செய்து வருகின்றனர் 
 
இருப்பினும் விஜய் சேதுபதி இது குறித்து எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கவியரசு வைரமுத்து தனது டுவிட்டர் தளத்தில் விஜய் சேதுபதிக்கு தனது கவிதைப் பாணியில் ஒரு அறிவுரை கூறியுள்ளார். அந்த அறிவுரையில் அவர் கூறியிருப்பதாவது  
 
கலையாளர் 
விஜய் சேதுபதிக்கு…
 
சில நேரங்களில்
செய்து எய்தும் புகழைவிடச்
செய்யாமல் எய்தும் புகழே
பெரிதினும் பெரிது செய்யும்.
 
நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.
வளர்பிறையில் கறை எதற்கு?
 
இன உரிமைக்காகக்
கலை உரிமையை
விட்டுக் கொடுப்பதே விவேகம்;
நீங்கள் விவேகி.