வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: புதன், 25 ஏப்ரல் 2018 (20:50 IST)

தியா: திரைவிமர்சனம்

சிறுவயதிலேயே காதலிக்கும் சாய்பல்லவியும் நாகசவுரியாவும் தப்பு செய்துவிட இதன்காரணமாக சாய்பல்லவி கர்ப்பமாகிறார். இந்த குழந்தை பிறந்தால் சாய்பல்லவியின் எதிர்காலம் பாதிக்கும் என்று இருவீட்டார் கூடி பேசி கருவை கலைத்துவிடுகின்றனர். கலைந்த கரு பேயாகி, கலைக்க காரணமாக இருந்தவர்களை பழிவாங்குகிறது. கடைசியில் சாய்பல்லவியின் கணவர் நாகசவுரியவையும் பழி வாங்க முயற்சி செய்ய, அதை சாய்பல்லவி எப்படி தடுக்கின்றார் என்பதுதான் மீதிக்கதை
 
தமிழில் சாய்பல்லவிக்கு முதல் படம். நல்ல அழுத்தமான கேரக்டரை மிகைப்படுத்தல் இல்லாத நடிப்பை கொடுத்து அனனவரையும் கவர்ந்துள்ளார். தனது கருவில் இருந்த குழந்தையை பார்க்க துடிப்பது, பார்த்த பின் ஏற்படும் உணர்ச்சி கலந்த தாய்ப்பாச நடிப்பை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.
 
நாகசவுரியாவுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு என்றாலும் திருப்தியாக செய்துள்ளார். குழந்தை நட்சத்திரம் வெரோனிகாவுக்கு படம் முழுவதும் உட்காருவது மட்டுமே வேலை. ஆர்ஜே பாலாஜியை இந்த படத்தில் வீணடித்துள்ளனர்.
 
சாம் சிஎஸ் இசையில் இரண்டு பாடல்கள் அருமை. பின்னணி இசையும் ஒரு த்ரில் படத்திற்கு உண்டான மிரட்டலான இசை. ஒளிப்பதிவு, எடிட்டிங் கச்சிதம்
 
குழந்தை தான் கொலையாளி என்பதை இயக்குனர் விஜய் கொஞ்சம் சஸ்பென்ஸ் வைத்திருக்கலாம். இரண்டாவது ரிலீல் சஸ்பென்ஸ் உடைந்துவிட்டதால் திரைக்கதையில் தொய்வு இருப்பது போன்று தோன்றுகிறது. இருப்பினும் யாரும் எதிர்பாராத வித்தியாசமான கிளைமாக்ஸ் கொடுத்து அசத்தியுள்ளார். 
 
மொத்ததில் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு அருமையான தாய்ப்பாசத்துடன் கூடிய த்ரில் கதை,