Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்: காரணம் என்ன?

Last Modified சனி, 21 ஏப்ரல் 2018 (17:26 IST)
கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விஜய். இவரது இயக்கத்தில் நடிகை சாய்பல்லவி முக்கிய வேடத்தில் நடித்த படம் 'கரு'. இந்த படம் கடந்த மார்ச் மாதமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் காரணமாக
ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி
செய்வதைபோல் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தின் டைட்டிலும் 'தியா' என்று மாற்றப்பட்டதுள்ளது. தியா என்பது சாய்பல்லவின் கேரக்டர் என்று கூறப்படுகிறது. தியா என்ற டைட்டில் தான் முதலில் முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் கரு டைட்டில் தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடித்திருந்ததால் அந்த டைட்டில் வைக்கப்பட்டதாகவும், தற்போது படக்குழுவினர்களின் விருப்பப்படி 'தியா' என்றடைட்டில் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாய்பல்லவி, நாகசெளரியா, ஆர்ஜே பாலாஜி, சந்தானபாரதி, ரேகா, நிழல்கள் ரவி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விக்ரம் வேதா 'புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :