Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சினிமாவில் இருந்து விலகி விடுவேன்: சாய் பல்லவி!

Last Updated: புதன், 25 ஏப்ரல் 2018 (13:58 IST)
நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் படங்களில் நடிக்காமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்கலில் நடித்தார். 
 
தற்போது தமிழ், தெலுங்கில் ‘கரு’ என்ற பெயரில் தயாராகி தற்போது ‘தியா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகன் நாகசவுரியாவுக்கும், சாய் பல்லவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. 
 
இது குறித்து சாய்பல்லவி ஏற்கனவே பேசியிருந்தாலும், இந்த பிரச்சனை தீராமல் இருப்பதால் மீண்டும் இது குறித்து பேசியுள்ளார். சாய் பல்லவி கூறியதாவது, நாகசவுரியாவுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவரிடம் நான் பேசாமல் இருந்ததால் ஒருவேளை என்னை அவர் தவறாக புரிந்து இருக்கலாம். 
 
என்னால் யாரும் காயப்பட கூடாது என்று நினைப்பேன். நாகசவுரியா சிறந்த நடிகர். படப்பிடிப்பில் அமைதியாக இருப்பார். என்மீது நாகசவுரியா மட்டுமின்றி வேறு எந்த நடிகருடனும் எனக்கு மோதல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
 
மேலும், நான் டாக்டருக்கு படித்து இருக்கிறேன். டாக்டர் தொழில் செய்ய வேண்டும் என்று விருப்பம் வந்தால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன் எனவும் கூறியிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :