வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சமைக்கத் தயாரா?
Written By Sasikala

நுங்கில் செய்திடலாம் வகை வகையான பானங்கள்!

நுங்கு கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில்  வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். கோடை வெயிலை  தவிர்க்க நுங்கு சாப்பிடுங்க. நுங்கில் சத்துகள் நிறைந்து உள்ளன.

 
1. நுங்கு மில்க் ஷேக்
 
இளநுங்கு - 4
பால் - 2 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ரோஸ் எசன்ஸ் - சிறிது
ஐஸ் க்யூப்ஸ் - சிறிது
 
செய்முறை:
 
நுங்கின் மேல் தோலை உரித்து எடுத்து விட வேண்டும். பாலை காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும். மிக்சியில் நுங்கு, பால்,  சர்க்கரை, ரோஸ் எசன்ஸ், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அரைத்து, ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே சிறிது நுங்கை மிதக்க  விட்டு அருந்தலாம்.
 
2. நுங்கு ரோஸ்மில்க்
 
இளம் நுங்குச் சுளைகள் - 3
சர்க்கரை - 3 டீஸ்பூன்
ரோஸ் சிரப் - 1 டீஸ்பூன்
பால் - 3/4 கப்
சாரை பருப்பு (அ) பிஸ்தா பருப்பு - கால் 
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:
 
நுங்கின் தோலை நீக்கி மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை சூடு செய்து, சாரை பருப்பை  வறுத்தெடுக்கவும். பாலை காய்ச்சிக்கொள்ளவும். பிறகு, காய்ச்சி, ஆறிய பாலில் சர்க்கரை, ரோஸ் சிரப், அரைத்த நுங்கு, வறுத்த  பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி பரிமாறவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்தினால் சுவை கூடுதலாக  இருக்கும். கோடைக்கு இதமாக நுங்கும் பாலும் சேர்ந்த அருமையான பானம் இது.
 
3. நுங்கு கீர்
 
பால்- 1/2 லிட்டர்
இளசான நுங்கு- 20
சர்க்கரை- 200கிராம்
ஏலக்காய்தூள்- கொஞ்சம்

செய்முறை: 


நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். பாலை சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆற வைத்து, நுங்கை மிக்ஸியில் அரைத்து பாலில் கலந்து ஏலக்காய் தூள் சேர்த்து ஆற வைத்து குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்தும் குடிக்கலாம். உப்பு  சேர்த்து குடிப்பதாக இருந்தால் சீரகம் சேர்த்து ஏலக்காயை தவிர்க்க வேண்டும்.