வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (21:11 IST)

வேறு எதுவும் வேண்டாம் : அன்பு மட்டும் போதும் - தினகரன் உருக்கம்

அடுத்தடுத்து சோதனை மேல் சோதனையாக உள்ளது டிடிவி. தினகரனின் அரசியல் நகர்வுகள். ஆனாலும் புத்தெழுச்சியுடன் தான் இருக்கிறார். வரும் தேர்தலுக்காக பிரசாரம் செய்து வருகிறார். தன் தொண்டர்களுக்கும் உற்சாகம் ஊட்டிவருகிறார்.
இரட்டை இலையும் போய், போன் தேர்தலில் கைக்கொடுத்த  குக்கரும் கையைவிட்டு சென்றுவிட்டது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு ஒவ்வொரு தொகுதிக்கு அவர் செல்லும் போது ஆர்வமிகுதியால் அவரது தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து, பொன்னாடை போர்த்தி வந்தனர். 
 
எனவே இனிமேல் அடுத்த முறை  இதெல்லாம் வேண்டாம்! ஆர்ப்பட்டமான அமோக வரவேற்பு எல்லம் வேண்டாம். மாசுக்கேடான  பிளாஸ்டிக் தோரணமும் வேண்டாம். அதற்குப் பதிலாக உங்கள் மட்டும் வேண்டும் என்று கூறினார்.
 
மேலும் தன் கட்சியினருக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
 
தேர்தல் களத்தில் துரோகிகளும் எதிரிகளும் கொடுக்கும் தொல்லைகளை எல்லம் தூள்தூளாக்கி வெற்றியைக் குவிக்கும் வகையில் நீங்கள் ஆற்றி வரும் பணிகள் நமது இயக்கத்திற்கு புது உற்சாகத்தை கொடுக்கின்றன. நம்மை எப்படியாவது வீழ்த்திட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் இதற்காக எந்த எல்லைக்கும் போவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.