அடுக்கடுக்கான கேள்விகள்: தலைதெறிக்க ஓடிய செல்லூர் ராஜூ

sellur raju
Last Modified புதன், 10 ஏப்ரல் 2019 (14:18 IST)
மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் செல்லூர் ராஜு ஓட்டமும் நடையுமாக கிளம்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் ராஜ் சத்யன் நேற்று, மதுரை தொகுதிக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என என்னிடம் கேளுங்கள் என கூறி ஒரு வாட்ஸ் ஆப் நம்பரை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். அப்போது அவருடன் செல்லூர் ராஜூவும் உடனிருந்தார். 
 
அதன் பின்னர் செய்தியாளர்கள், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மதுரை மக்களவை தொகுதியில் தர்போது 1 எம்பி மற்றும் 4 அதிஒமுக எம்.எல்.ஏ-க்கள் இருந்தும் தொகுதியில் மக்கள் பிரச்சனை ஏன் இன்னும் தீர்க்கப்படவில்லை என அடுக்ககடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். 
 
இதற்கு பதில் ஏதும் கொடுக்க முடியாமல் அமைச்சர் செல்லூர் ராஜூவும் வேட்பாளர் ராஜ் சத்யனும் திணறினர். இதனால், வேறு வழியின்றி செய்தியாளர் சந்திப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாக கிளம்பி சென்றனர். 
 
அப்போது செய்தியாளர்கள், ஓடாதீர்கள் பதில் சொல்லுங்கள் என விடாமல் கேட்டும், சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :