அதிமுகவுக்கு மரண அடி: டைம் பார்த்து பழி தீர்க்கும் விஜய் ரசிகர்கள்!!!

Vijay
Last Modified புதன், 10 ஏப்ரல் 2019 (10:06 IST)
ஓட்டு கேட்டு வர வேண்டாம் என அதிமுகவினருக்கு விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் விஜய் ரசிகர்கள், தங்கள் வீட்டு வாசலில் ஒரு பதாகையை ஒட்டியுள்ளனர். அதில் இது விஜய் ரசிகன்/ரசிகையின் வீடு, அதிமுகவினர் ஓட்டு கெட்டு வரவேண்டாம் என குறிப்பிட்டுள்ளனர். சமீபத்தில் விஜய்யின் சர்கார் படத்தின் ரிலீஸ் போது அதிமுகவினர் சிலர் விஜய்யின் பேனரை கிழித்தும், விஜய ரசிகர்களை தாக்கியும் ரவுடிசம் செய்தனர்.
sarkar
இதற்கு பழிவாங்கும் விதமாக விஜய் ரசிகர்கள், ஏப்ரல் 18, ஐ ஆம் வெய்ட்டிங் ஃபார் மை ஓட் என பதிவிட்டுள்ளனர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி உண்டு, அதற்கேற்றாற் போல அதிமுகவினர் முன்பு செய்த வம்பு தற்போது அவர்களுக்கே பிரச்சனையாக திரும்பியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :