புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2019 (09:16 IST)

இடைத்தேர்தலுக்கு தடை ?– முன்னாள் எம்.எல்.ஏ மனு தள்ளுபடி !

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கவேண்டுமெனக் கூறி முன்னாள் எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த அசோக் ஆனந்த் என்பவர் முறைகேடாக சொத்துக் குவிப்பு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரின் தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

காலியாக உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு மக்களவைத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பாணையை வெளியிடத் தடை கேட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட அசோக் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த மனுவில் தன் மீதான தகுதி நீக்கம் சரி தானா என்பது குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் சார்பில் அசோக் ஆனந்தின் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதனைக் கேட்ட நீதிபதிகள் அசோக் ஆனந்தின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.