பிரேமலதா ஒரு தரம் தாழ்ந்த அரசியல்வாதி: நாராயணசாமி கடும் தாக்கு

VM| Last Modified திங்கள், 11 மார்ச் 2019 (10:47 IST)
புதுச்சேரியில்  புதுப்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை அம்மாநில முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “ பிரேமலதா விஜயகாந்த் தொடர்ச்சியாக திமுகவை தரக்குறைவான விமர்சித்து வருகிறார்.  தேமுதிக ஒரே நேரத்தில் திமுகவுடனும், அதிமுகவுடன் கூட்டணி பேரம் பேசியது.
 
ஆனால்  அவர்களின் பேரம் திமுகவிடம் எடுபடவில்லை. திமுகவின் கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக ஸ்டாலின் சொல்லிவிட்டார். அதன்பிறகு தே.மு.தி.கவினர் அ.தி.மு.கவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தனிப்பட்ட முறையில் எந்தவொரு அரசியல் கட்சி தலைவர்களையும் விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. கொள்கை ரீதியாக எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். இதிலிருந்து பிரேமலதா ஒரு தரம் தாழ்ந்த அரசியல்வாதி என்பது தெரிகிறது. தேமுதிகவுக்கு மக்கள் கண்டிப்பாக தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :