பூசாரிக்கே விபூதி அடித்த அமமுக வேட்பாளர்: சிவகிரியில் சுவாரஸ்யம்!

Last Updated: புதன், 10 ஏப்ரல் 2019 (15:35 IST)
தென்காசி மக்களவை தொகுதியில் அமமுக வேட்பாளராக பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். ஏற்கனவே இவர் பெயரில்தான் 4 பெண் வேட்பாளர்கள் உள்ளனர்கள். 
 
இந்நிலையில் இவர், வாசிதேவநல்லூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிராமம்ங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு, சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் தட்டங்குளம் காளியம்மன் கோவிலில் வழிபாடு செய்தார். 
 
அபோது எதிர்பாராத விதமாக திடீரென பொன்னுதாய்க்கு சாமி வந்து சாமியாடினார். அதனை தொடர்ந்து அருள் வாக்கும் கூற ஆரம்பித்தார். மேலும், அவருடன் வந்திருந்த தொண்டர்கள், அங்கு குழுமி இருந்த மக்கள் என அனைவருக்கும் வியூதி வைத்து ஆசி வழங்கினார். 
 
இதில் ஹைலைட் என்னவெனில், வழக்கமாக எல்லோருக்கும் விபூதி வைக்கும் பூசாரிக்கே பொன்னுதாய் விபூதி அடித்து ஆசி வழங்கியதுதான். பின்னர் சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பி, மீண்டும் தனது பிரச்சாரத்தை துவங்கினார். 


இதில் மேலும் படிக்கவும் :