வருத்தத்தில் தளபதி நடிகர்...


Cauveri Manickam (Suga)| Last Updated: புதன், 4 அக்டோபர் 2017 (21:40 IST)
தன்னுடைய படங்களுக்கு சிக்கல்கள் வந்துகொண்டே இருப்பதால், வருத்தத்தில் இருக்கிறாராம் தளபதி.

 
 
தளபதி நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம், அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னோட்டம் போல இருந்ததால், ஆளுங்கட்சியில் இருந்த அம்மையார் அந்தப் படத்துக்கு ஏகப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தினார். 
 
கடைசியில் அந்தப் படத்துக்கு வைக்கப்பட்ட ‘டைம் டு லீட்’ என்ற கேப்ஷனைத் தூக்கியபிறகு, படம் ரிலீஸாக அனுமதிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் இணையத்தில் வெளியாகிவிட்டது படம்.
 
அதற்கடுத்து ஆயுதத்தின் பெயரில் வந்த படத்துக்கும், தமிழ் ஆர்வலர்களால் சிக்கல் வந்தது. ஒருவழியாக அவை களையப்பட்டு, படம் ரிலீஸானது. தற்போது, தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள படத்துக்கும் தலைப்பால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 
நீதிமன்றத்தில் இன்று நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம். அடுத்தடுத்து தன்னுடைய படங்களுக்கு சிக்கல்கள் வந்துகொண்டே இருப்பதால், வருத்தத்தில் இருக்கிறாராம் தளபதி.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :