திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 4 அக்டோபர் 2017 (15:27 IST)

அவதார் படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கும் டைட்டானிக் ரோஸ்

டைட்டானிக் படம் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகை கேத் வின்ஸ்லெட் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தில் நடிக்கவுள்ளார்.


 

 
அவதார் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றிப்பெற்றது. இதன் அடுத்தடுத்த பாகங்களை உருவாகி வருகிறது. இதற்காக ஜேம்ஸ் கேமரூன் கடந்த பத்து ஆண்டுகளாக உழைத்து வருகிறார். 
 
இவர் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் திரைப்படம் ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுவதும் காதல் காவியமாக பிரபலமடைந்தது. தற்போது வரை சிறந்த காதல் காவியம் ஒன்றில் டைட்டானிக் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலம் கேத் வின்ஸ்லெட் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றார்.
 
அதன்பிறகு அவர் ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வரும் அவதார் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.