Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாங்கிய அட்வான்ஸை வட்டியோடு திருப்பிக் கொடுத்த சித்திர நடிகை

karunaas
Last Modified வியாழன், 30 நவம்பர் 2017 (16:39 IST)
காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க வாங்கியிருந்த அட்வான்ஸை, வட்டியோடு திருப்பிக் கொடுத்துவிட்டாராம் சித்திர நடிகை.
டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் சித்திர நடிகை. அந்த ஷோ மூலம் நடிகைக்கு ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிகர்கள் பெருகினார்கள். அதனால், அந்த ரசிகர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, செலக்டிவாக மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
 
ரியாலிட்டி ஷோவுக்கு முன்பு, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்தார் சித்திர நடிகை. ஆனால், தற்போது அந்த அட்வான்ஸை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டாராம். காமெடி நடிகர் சங்கப் பதவியிலும் இருப்பதால், பிரச்னையை சங்கத்துக்கு கொண்டு போனார். ‘சொன்ன தேதியில் படத்தை ஆரம்பிக்கவில்லை’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறாராம் சித்திர நடிகை.


இதில் மேலும் படிக்கவும் :