அஜித்தின் விஸ்வாசம் படத்தில் ஜோடி சேரும் பாகுபலி நடிகை

Ajith
Last Updated: வியாழன், 30 நவம்பர் 2017 (11:21 IST)
நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணி மீண்டும் இணையும் புதிய படத்திற்கு விசுவாசம் என பெயர்  வைக்கப்பட்டுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் சிவாவே  இயக்குகிறார். 
இப்படத்தையும், சத்யஜோதி பிலிம் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல், இளமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண்ட அஜித் உடல்  எடையையும் குறைத்து உடற்கட்டுடன் இருக்கிறாராம்.
 
இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க, அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அனுஷ்கா ஏற்கனவே அஜித்தின் `என்னை அறிந்தால்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிராமத்து  பின்னணியில் உருவாக இருக்கிறதாம். ஜனவரியில் தொடங்கும் `விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த  படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :