வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 பிப்ரவரி 2019 (17:23 IST)

கண்ணா பின்னா ஆஃபரால் ...கடும் நஷ்டமான ’ஜியோ ‘

இந்தியா தொழில்நுட்பங்களில் படம் காட்டிக் கொண்டிருக்கிறது. உலகில் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் எல்லாதுறைகளிலும் கால் பதிக்க அத்துணை வணிக நிறுவனங்கள் விரும்புகின்றன.

அப்படியிருக்க தாய் மண்ணில் புது தொழில்நுட்பத்தில் பல சலுகைகளைப்புகுத்தி வெற்றி கண்நோக்கத்துடன் சந்தைப்படுத்த இங்கு பூர்வீகமாக குடியுள்ள நிறுவனம் ஒன்று முயற்சி மேற்கொள்ளாத என்ன...?
ஆம்! அப்படித்தான் நம் இந்தியாவில் ரிலையன்ஸ் என்ற மாபெரும் கம்பெனியை தோற்றுவித்த திருபாய் அம்பானி. வியாபார சக்கரவர்த்தி என்று பெயரெடுத்தார்.
இவருடைய மகன் முகேஷ் அம்பானி இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். ஆம்! கடந்த 2018 ஆம் ஆண்டில் இவரது ஆர்.ஜியோவிற்கு ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

இந்த நஷ்டம் 2019 -  20 நிதியாண்டில் சரிசெய்யப்படும் என்று நிதிநிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
 
ஜியோ இந்த தொலைதொடர்பு  போட்டி சந்தையில் ஏற்கவே அரசனாக இருந்த ஏர்டெல், சிற்றரசனாக இருந்த வோடபோன் ஆகிய நிறுவனங்களுடன் தன்னை அதிகம் சலுகை கொடுக்கும் பல திட்டங்களுடன் பல கோடி இளைஞர்களை குறிவைத்துக் கலம் இறங்கியது.
தற்போது அதிகளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் ஜியோ நிறுவனத்தின் வருவாய் பற்றாக்குறை  ஏர்டெல்,வோடபோன் ஐடியா நிருவனங்களுடன் ஒப்பிடும் போது சற்று அதிமாகவே இருக்கூட்டம் என்று தெரிகிறது.

மேலும் வரும் 19- 20 ஆகிய நிதியாண்டில் ஆர்.ஜியோவின் வாடிகையாளர்களிடம் இருந்து பெறப்படும் சேவைக்கட்டணங்களில் இருந்து பெற்று சரிசெய்யப்படலாம் என இந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
 
தன் தம்பி அனில் அம்பானி (ஆர். காம்)தொலைதொடர்புத்துறையில் கோலோச்சிக்கொண்டிருக்கும்  போது முகேஷ் இதை (அர்.ஜியோ) தொடங்கினார்.

கட்டுப்பாடில்லாத வாரிக்கொடுக்கும் இண்டெர்னெட் மற்றும் போனில் பேசும் வசதி, அழைக்கும் வசதி என பல ஆஃபர்களை அள்ளிக் கொடுத்து குறுகிய காலத்திலேயே இந்தியாவின் தொலைதொடர்பு சந்தையை தன் வசப்படுத்தியது.
 
ஆனால் மலிவு விலையில் கைபேசி திட்டத்திற்காக ஆர்,ஜியோவில் ரூ.7200 கோடி மற்றும் ஆர்.ஜியோவின் செயலாக்கத்திற்கு ரூ.2.6 லட்சம் கோடியை ஆர்.ஜியோவில் முதலீடு செய்தார் என்று தெரிகிறது.
ஜியோ,சலுகைகளை வாரி வழங்கியதால் பலகோடி பயனாளர்களை ஏர்டெல், ஐடியா, வோடபோன், போன்ற நிறுவங்கள் இழந்தன. இந்நிறுவனங்களின் பயனாளர்கள் ஜியோவில் இணைந்தனர்.
 
முதலில் அதிக சலுகை தந்து லாபப்பாதையில் செல்வது போல இருந்தாலும், நாளாக நாளாக ஆர்,ஜியோவின் வருவாய் குறைவதாகவும் தெரிந்தது.
மேலும் நடப்பு நிதியாண்டான 2018 - 19 ல் வோடபோன், ஐடியா நிறுவனங்களின்நிகர வருவாய் இழப்பு ரூ.3200 கோடியாக இருக்கும் எனவும், ஏர்டெல் நிறுவனத்தின் நிகர வருவாய்  இழப்பு ரூ. 750 கோடி இருக்கும் எனவும்.புளும் பெர்க் நிறுவனம் கூறியிருக்கிறது.

ஆனால் இதெல்லாவற்றையும்விட ஆர்.ஜியோவின் நிகர  வருவாய் இழப்பு ரூ.15000 கோடியாக உள்ளதாகவும் என சான்போர்ட் சி பெர்ன்ஸ்டீன் அன் கோ நிறுவனத்தைச் சேர்ந்த கிரிஷ் லேன் மற்றும் சாமுவேல் சென் ஆகியோர் முகேஷி அம்பானியின் ஆர்.ஜியோவிற்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.