செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 12 ஜனவரி 2019 (16:12 IST)

அனிருத் குரலில் இன்னொரு அற்புதம் - மனதை உருகவைக்கும் பாடல் இதோ..!

"இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" படத்தின் கண்ணம்மா உன்ன மனசுல நினைக்கிறேன் லிரிக் வீடியோ வெளியானது !


 
பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடித்து உருவாகியுள்ள படம் "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்". இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வருகிறார்.  மாகாபா ஆனந்த், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம்  காதல் ரொமாண்டிக் கதையை மையப்படுத்தி உருவாகிவருகிறது.  
 
இந்நிலையில் நேற்று இப்படத்தின் "கண்ணமா உன்ன மனசுல நினைக்கிறேன்" என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
 
ஒரே நேரத்தில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கும் அனிருத், தற்போதைய இளம் தலைமுறையினருக்கு ஒரு உதாரணமாக செயல்படுகிறார். அவர் தன்னுடைய அனைத்து பாடல்களையும்  தன்னுடைய தனித்துவத்தால் அனைத்து வயதினரையும் பாடலை கேட்க வைத்து விடுவார்.


 
அடந்தவகையில் தற்போது   "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" படத்துக்காக 'கண்ணம்மா' என்ற இந்த அற்புதமான பாடலை தன் இனிமையான குரலில் அவ்வளவு மெலோடியாக பாடி நம் உள்ளதை கவர்ந்து ஈர்க்கிறார். இந்த பாடலும் அனிருத்தின் மேஜிக் குரலில் கேட்பவரை மதிமயங்க வைக்கிறது.