திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (09:26 IST)

தீவிர வலைப்பயிற்சியில் தோனி அண்ட் கோ: வைரல் வீடியோ!!

ஐபிஎல்-க்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது சீசன், ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கி மே 30 ஆம் தேதி நிறைவடைகிறது. ஐபிஎல் போட்டிக்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. 
 
சென்னை அணி கடந்த சில ஆண்டுகளாக இளம் வீரர்களைக் காட்டிலும் 30 வயதைத் தாண்டிய மூத்த வீரர்களையே தங்கள் அணியில் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதனால் ரசிகர்கள் சிஎஸ்கேவை டாடீஸ் டீம் என கேலி செய்வது உண்டு. 
 
ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக சிஎஸ்கே வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  
 
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஓய்வுபெற்ற நிலையில் தற்போது ஐபிஎல்-க்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.