திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 மார்ச் 2021 (17:22 IST)

ஐபிஎல் களேபரம் தொடங்கியது… மும்பைக்கு சென்றது சென்னை அணி!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை அணி மும்பைக்கு கிளம்பி சென்றுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் தாமதமாக ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடத்தப்பட்டன. அதையடுத்து இந்த ஆண்டு இந்தியாவிலேயே குறைந்த அளவிலான மைதானங்களில் நடத்தப்பட உள்ளன. ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் நடக்கிறது.

இதையடுத்து போட்டிக்காக சென்னை அணி இப்போது  மும்பைக்குக் கிளம்பி சென்றுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கி சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் இன்று சென்னை அணி மும்பைக்கு சென்றுள்ளது.