திங்கள், 21 அக்டோபர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2024 (14:59 IST)

தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறு காராசேவ் செய்வது எப்படி?

Karachev recipe
தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்தாலே முதல் வேலை பலகாரங்கள் செய்வதுதான். தீபாவளிக்கு செய்யும் விதவிதமான பலகாரங்களில் நீண்ட நாட்கள் வைத்து சாப்பிடக்கூடிய காராசேவ் செய்வது எப்படி என பார்ப்போம்.


 
தேவையான பொருட்கள்:
  • கடலை மாவு - 1 கப்
  • அரிசி மாவு – அரை கப்
  • நெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
செய்முறை:
அரிசி மாவு, கடலை மாவை ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இதில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் மற்றும் நெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மென்மையான மாவை பிசையவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் சூடானதும், உருண்டைகளை முறுக்கு அச்சில் போட்டு பிழிய வேண்டும். பொன்னிறமாக சேவ் பொறிந்து வரும்போது எடுத்து எண்ணெய் வடிகட்டும் பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

பின்னர் தனியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய் வைக்கவும். கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்க்கவும். வறுத்த உருண்டைகளை இதில் போட்டு கிளறவும். இப்போது சுவையான காரசேவ் தயார்.  காரசேவை நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள விரும்பினால், ஒரு காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

Edit by Prasanth.K