சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்த நீச்சலுடையில் டைட்டானிக் நாயகன் - நாயகி!

sivalingam| Last Modified வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (22:08 IST)
உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன காலத்தால் அழியான காதல் காவியம் டைட்டானிக். ஜேக்-ரோஸ் என்ற கேரக்டர்களை இத்தனை வருடம் கழித்தும் இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு கவலைப்பட்டவர்களை விட இந்த ஜோடி பிரிந்ததற்கு கவலைப்பட்டவர்கள் அதிகம்

 
இந்த நிலையில் இந்த கேரக்டர்களில் நடித்த கேட் வின்செண்ட் மற்றும் டிகேப்ரியோ ஆகியோர்களை காலம் வெவ்வேறு பாதையில் பயணிக்க வைத்தாலும், இருவரும் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக நண்பர்களாகத்தான் இருந்துள்ளனர்.
 
இந்த நிலையில் தெற்கு ஸ்பெயினில் நடந்த சுற்றுப்புற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மாநாட்டில் இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கேட் வின்செண்ட்டை டிகேப்ரியோ தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் நீச்சலுடையில் தங்களது 20 ஆண்டுகால மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளதாக தெரிகிறது


இதில் மேலும் படிக்கவும் :