வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2016 (11:54 IST)

ரூ.70 லட்சத்திற்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலின் சாவி!!

டைட்டானிக் கப்பலின் லாக்கருக்கான சாவி நடுக்கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த சாவி ரூ.70 லட்சத்திற்கு ஏலம் போனது. 

 
இங்கிலாந்து நாட்டின் துறைமுக நகரமான சவுத்தம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்கை நோக்கி 2,224 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் கடந்த 1912, ஏப்ரல் 10-ம் தேதி முதல் பயணத்தை தொடங்கிய டைட்டானிக் சொகுசு கப்பல்.
 
புறப்பட்ட 4-வது நாள் பனிப்பாறையில் மோதி, ஏப்ரல் 15-ல் நடுக்கடலில் மூழ்கியது. இதில் பயணித்த 1,500 பயணிகளும், கப்பல் சிப்பந்திகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
டைட்டானிக் கப்பலின் அனுபவங்களை நினைவூட்டும் வகையில் கப்பல் மூழ்கிய இடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொருட்கள் மீட்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டு வருகிறது.
 
அந்த வகையில் டைட்டானிக் கப்பலின் உயிர் காக்கும் உடை (லைஃப் ஜாக்கெட்) வைக்கப்பட்டிருந்த லாக்கருக்கான சாவி நடுக்கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. 
 
சுமார் ரூ.41 லட்சம் வரை இந்தச் சாவி ஏலத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாவி ரூ.70 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.