செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (09:13 IST)

விதவிதமாய்.. வித்தியாசமாய்! ஏகப்பட்ட பட அறிவிப்புகளை அள்ளிவிட்ட டிஸ்னி! - D23 2024 Updates!

D23 announcements

பிரபலமான டிஸ்னி நிறுவனம் அடுத்த ஒரு ஆண்டுக்கு தாங்கள் தயாரித்து வெளியிட போகும் புதிய அனிமேஷன் படங்கள், வெப் சிரிஸ், Sequel, Prequel கதைகள், சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் என அப்டேட்ஸை அள்ளிவிட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் அனிமேஷன் பட தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக கால்பதித்து பல படங்களை இயக்கி வருகிறது டிஸ்னி. டிஸ்னியின் கிளை நிறுவனங்களான மார்வெல் ஸ்டுடியோஸ், பிக்ஸார் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்தும் ஏராளமான புதிய அனிமேஷன் படங்கள், சூப்பர்ஹீரோ படங்கள் வெளியாகி வருகின்றன.

 

இந்நிலையில் டிஸ்னி தங்களது பட அறிவிப்புகள், ட்ரெய்லர்களை வெளியிடவே டிஸ்னி எக்ஸ்போ என்ற பெரிய நிகழ்ச்சியை நடத்துகிறது. நேற்று இந்த D23 Expo 2024 நடைபெற்ற நிலையில் பல பிரபலமான படங்களின் அடுத்த பாகங்கள் மற்றும் புதிய படங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் டிஸ்னியின் அறிவிப்புகள்

D23 announcements
  • மோனா 2 (அனிமேஷன்)
  • ஸ்னோ ஒயிட் (லைவ் ஆக்‌ஷன்)
  • லிலோ அண்ட் ஸ்டிட்ச் (லைவ் அனிமேஷன்)
  • இன்க்ரெடிபிள்ஸ் 3 (அனிமேஷன்)
  • டாய் ஸ்டோரி 5 (அனிமேஷன்)
  • ஃப்ரோஸன் 3 (அனிமேஷன்)
  • ஸூட்டோபியா 2 (அனிமேஷன்)
  • ஸ்டார் வார்ஸ் : ஸ்கெலிடன் க்ரூ (லைவ் ஆக்‌ஷன் - வெப் சிரிஸ்)
  • அகதா ஆல் அலாங் (லைவ் ஆக்‌ஷன் வெப் சிரிஸ்)
  • தி பெண்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் (லைவ் ஆக்‌ஷன்)
  • டேர்டெவில் ; பார்ன் அகெய்ன் (லைவ் ஆக்‌ஷன்)
  • அவதார் 3 : ஃபயர் அண்ட் ஆஷ் (லைவ் ஆக்‌ஷன்)
  • ட்ரான் : ஏரெஸ் (அனிமேஷன்)
  • ஹாப்பர்ஸ் (லைவ் ஆக்‌ஷன்)
  • முஃபாசா: தி லயன் கிங் (லைவ் அனிமேஷன்)
  • அயர்ன் ஹார்ட் (மார்வெல் - லைவ் ஆக்சன்)
  • ஆண்டோர் சீசன் 2 (ஸ்டார் வார்ஸ் - லைவ் ஆக்‌ஷன்)
  • தி மாண்டலோரியன் அண்ட் க்ரோகு (ஸ்டார் வார்ஸ் - லைவ் ஆக்‌ஷன்)
  • பெர்சி ஜாக்சன் அண்ட் தி ஒலிம்பியன்ஸ் சீசன் 2
 

Edit by Prasanth.K