1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (11:03 IST)

வெளியானது ஓபன்ஹெய்மர் ட்ரெய்லர்..! மரண வெயிட்டிங்கில் நோலன் ரசிகர்கள்!

Oppenheimer
பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஓபன்ஹெய்மர் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் வித்தியாசமான கதைகளங்களில் படம் எடுத்து உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்டிருப்பவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது முந்தைய படமான டெனட் காலத்தை திருப்புதல் வகை சயின்ஸ் பிக்சனில் பெரும் பிரம்மாண்டத்தை காட்டியது.

அதை தொடர்ந்து தற்போது அணு ஆயுதம் குறித்த வரலாற்று படம் ஒன்றை இயக்கியுள்ளார் நோலன். 1945ல் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மேல் அமெரிக்கா வீசிய அணுகுண்டு லட்சக்கணக்கான உயிர்களை அடையாளம் தெரியாமல் அழித்தது.

அப்படியான நாசகார அணுகுண்டு குறித்து தொடங்கப்பட்டதுதான் மன்ஹாட்டன் ப்ராஜெக்ட். அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் இயற்பியல் விஞ்ஞானி ராபர்ட் ஓபன்ஹெய்மர் மற்றும் குழுவினர் முதல் அணுகுண்டை வெடிக்க செய்தனர். அந்த ஓபன்ஹெய்மர் அணு ஆயுத சோதனை குறித்த அரசியல் பார்வையுடன் கூடிய படமாக இதை கிறிஸ்டோபர் நோலன் உருவாக்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படம் 2023ம் ஆண்டு ஜூலை 21ல் வெளியாக உள்ள நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K