வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (09:56 IST)

பிரபல ‘க்ரீன் பவர் ரேஞ்சர்’ திடீர் மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!

Power Ranger
90ஸ் கிட்ஸ் இடையே பிரபலமான பவர் ரேஞ்சர்ஸ் தொலைக்காட்சி தொடரில் க்ரீன் பவர் ரேஞ்சராக நடித்த பிரபல நடிகர் மரணமடைந்தார்.

90ஸ் கிட்ஸ் இடையே பிரபலமாக இருந்த தொலைக்காட்சி தொடர் ‘பவர் ரேஞ்சர்ஸ்’. பவர் ரேஞ்சர்ஸில் டைனோ தண்டர், எஸ்பிடி உள்ளிட்ட பல ஸ்குவாடுகள் உள்ளன. அதில் பிரபலமான ஒன்று ‘மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்’

இந்த மைட்டி மார்பின் பவர் ரேஞ்சரில் க்ரீன் ரேஞ்சராக நடித்தவர் ஜேசன் டேவிட் ஃப்ராங்க். பவர் ரேஞ்சரில் டாமி ஆலிவர் என்ற கதாப்பாத்திரத்தில் வரும் இவர் முதலில் வில்லன்களுடைய ஆளாக பவர் ரேஞ்சர்ஸில் சேர்ந்தாலும் பின்னர் நல்லவராக மாறிவிடுவார்.


பின்னர் வெள்ளை ரேஞ்சராக மாறி ஸ்குவாடை தலைமையும் தாங்கினார். பின்னர் படமாக வெளியான ’மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்’, ‘டர்போ பவர் ரேஞ்சர் மூவி’ போன்றவற்றிலும் நடித்தவர் 2017ல் வந்த பவர் ரேஞ்சர்ஸ் படத்தில் கேமியோ ரோலிலும் நடித்தார்.

இந்நிலையில் ஜேசன் டேவிட் ஃப்ராங்க் உயிரிழந்துவிட்டதாக அவரது மேனேஜர் அறிவித்துள்ளார். ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. அவரது மறைவு பவர் ரேஞ்சர் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K