வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (15:38 IST)

அவதார் 4 மற்றும் 5ம் பாகங்கள் வெளியாகாது!? – குண்டை போட்ட ஜேம்ஸ் கேமரூன்!

பிரபல ஹாலிவுட் படமான அவதாரின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் 4 மற்றும் 5ம் பாகங்கள் குறித்து ஜேம்ஸ் கேமரூன் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. இன்று வரை உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையும் அவதார் வசம் உள்ளது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 16ம் தேதி ‘அவதார்; தி வே ஆப் வாட்டர்’ வெளியாக உள்ள நிலையில் இது மிகப்பெரிய வசூல் சாதனை படைக்குமா என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



இந்நிலையில் அவதார் இரண்டாம் பாகம் குறித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன், இந்த இரண்டாம் பாகம் சரியாக வசூல் செய்யவில்லை என்றால் அவதாரின் 4 மற்றும் 5ம் பாகங்கள் வெளியாக வாய்ப்பிருக்காது என தெரிவித்துள்ளார். அவதார் முதல் பாகமே அதிக செலவை எடுத்த நிலையில் இந்த இரண்டாம் பாகமும் அதிக பொருட் செலவில் உருவாகியுள்ளது. அதோடே மூன்றாம் பாகத்திற்கான பாதி ஷூட்டிங்கையும் ஜேம்ஸ் கேமரூன் முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவதாரின் 5 பாகங்களும் வெளியாவது இந்த இரண்டாம் பாகத்தின் வெற்றியை பொறுத்து இருப்பதால் படம் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K