1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By

நெஞ்செரிச்சலா? இதை ட்ரை பண்ணுங்க...

நம்முடைய உணவுப்பழக்கம் மாற ஆரம்பித்த நாட்களிலிருந்து பல உடல்நல பிரச்சனைகள் மனிதர்களை வாட்டி வதைக்கிறது. அதிலும், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏராளம். 
 
அதிலும் பெரும்பாலானோருக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை இருக்கிறது. இதற்கு சில தீர்வுகளை காண்போம்.
 
சீரகம்: சீரகம் இரைப்பையில் அமில சுரப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் சீரகம் ஊற வைத்த நீரை குடித்து வாந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
 
அரிசி:  அரிசி உணவுகள் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை உறிஞ்சும் ஆற்றல் கொண்டது. ஒரு நாளில் ஒரு வேளை உணவாவது அரிசி உணவாக எடுத்து கொள்ள வேண்டும். 
 
வாழைப்பழம்: நெஞ்செரிச்சலை உடனடியாக குறைக்க வாழைப்பழம் சாப்பிடலா. வாழைப்பழத்திற்கு இயற்கையாகவே அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் உடனடி நிவாரணத்தை இது அளிக்கும்.
 
இஞ்சி: இஞ்சி அமில சுரப்பை கட்டுப்படுத்துகிறது. அதோடு உணவு செரிமானத்திற்கு உதவுவதால் நெஞ்செரிச்சல் குறைந்திடும்.
 
ஓட்ஸ்: ஓட்ஸில் குறைந்தளவிலான அமிலம் உள்ளது. நெஞ்செரிச்சல் ஏற்ப்பட்டு எந்த உணவினையும் சாப்பிட முடியாமல் இருந்தால் பயமின்றி ஓட்ஸ் சாப்பிடலாம்.
 
இளநீர்: இளநீர் உடலை குளர்ச்சியடைய செய்திடும். இதிலிருக்கும் பொட்டாசியம் அமிலச்சுரப்பை கட்டுப்படுத்துகிறது. உடனடி பலன்களும் கிடைக்கும்.