உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க...

Last Updated: ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (14:12 IST)
கடல் உணவுகள் அனைத்தும் ருசியாகவும், பல வகையான சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ள ஒன்றாக உள்ளது. கடல் உணவு வகைகளில் இறால் முக்கியமான ஒன்றாகும். இறால் உண்பதால் கிடைக்கும் நன்மைகளை காண்போம்...
 
1. இறாலில் குறைந்த கொழுப்பு, அதிகமான புரதம், கலோரிகள், கால்சியம், பொட்டாசியம், செலினியம், விட்டமின் எ, ஈ, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளது. 
 
2. இறால்கள் எதிர்ப்பு சக்தி குறைபாட்டை பாதுகாக்க பெரிதும் பயன்படுகிறது. மேலும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
 
3. இறாலில் குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளதால், இவை டயட் உள்ளவருக்கு சிறந்த உணவாக இருந்து நலமான உடலை தரும்.
 
4. இறாலில் உள்ள செலினியம் புற்றுநோய் செல்களை உடலில் உருவாகாமல் தடுக்கிறதாம். 
 
5. இறால் உயர் ரத்த அழுத்த கோளாறுகளை குணப்படுத்த கூடிய ஆற்றல் கொண்டவை. இவற்றில் சோடியம் அதிக அளவில் இருப்பதால் இதய நோய்களுக்கு சிறந்தது.
 
6. இறாலில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் சீரான செயல்பாட்டை தந்து, குறிப்பாக மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.


இதில் மேலும் படிக்கவும் :