திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 மார்ச் 2018 (19:25 IST)

மீன் கண்களை சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு?

மீன் சாப்பிடும்போது அதன் கண்களையும் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது.

 
மீன் பெரும்பாலும் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு. மீன் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் மீனில் சில பகுதிகளை ஒதுக்கிவிடுவது வழக்கம். குறிப்பாக மீன் செவுள்கள் மற்றும் கண்கள் பெரும்பாலானோர் ஒதுக்கிவிடுவது வழக்கம். 
 
மீன் மண்டையையும் சிலர் ஒதுக்கிவிடுவார்கள். ஆனால் நாம் ஒதுக்கும் மீன் கண்களை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. 
 
கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் மீன் கண்களை சாப்பிட்டு வந்தால் பிரச்சனை நீங்கிவிடும். மீன் கண்களில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் கண் பார்வையை பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.
 
மீன் கண்களை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு மற்றும் இதய பிரச்சனைகளுக்கான அபாயம் குறையும் என்று ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மீன்களை அதன் கண்களுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உடலில் இன்சுலின் அளவை குறைக்கும். அதோடு டைப்-1 சர்க்கரை நோயின் அபாயத்தையும் தடுக்கும்.
 
எனவே, இனி மீன் சாப்பிடும்போது மீன் கண்களையும் ஒதுக்காமல் சேர்த்து சாப்பிடுங்கள்.